செய்திகள்

மிதிபலகையில் பயணித்தவர் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு

பிபிலை பகுதியில்   செவ்வாய்க்கிழமை மதிய வேளையில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த நவாஸ்கான் (வயது-42) என்பவர் உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி-06, பரீனாஸ் வீதியைச் சேர்ந்த இவர் இரு ஆண் பிள்ளைகளின் தந்தையாவார்.

விபத்து பற்றி மேலும் தெரியவருவதாவது,

12.04.2016 அன்று காலை காத்தான்குடியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த பஸ் ஒன்றின் மிதிபலகையில் பயணித்த இவர், மிதிபலகை உடைந்து விழுந்ததன் காரணமாக பஸ் டயருக்குள் அகப்பட்டு உயிரிழந்துள்ளார். இதில் மேலும் சில பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் மஹியங்கனை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

n102 3