மின்னல் தாக்கி 15 வயது சிறுவன் பலி: வவுனியாவில் துயரம்
வவுனியா, கத்தார்சின்னக்குளம் பகுதியில் இன்று மாலை மின்னல் தாக்கியதில் 15 வயது சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ளான்.
வவுனியா, கத்தார்சின்னக்குளம் பகுதியில் மாலை ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக குளித்துவிட்டு வந்த அப்பகுதியைச் சேர்ந்த இலங்கேஸ்வரன் துலக்சன் (வயது 15) என்ற சிறுவனே மரணமடைந்துள்ளான். இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
N5