செய்திகள்

மின்னல் ரங்கா கைது!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீரங்கா கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் ஜயமினி புஷ்பகுமார என்கிற பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கிலேயே இவர் கைதாகியுள்ளார்.

கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுகொண்டிருந்த போது அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

-(3)