செய்திகள்

மின் தடை தொடர்பான அறிக்கை இன்று அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

கடந்த வாரம் நாட்டில் ஏற்பட்ட மின் தடை தொடர்பான ஆய்வு அறிக்கை இன்று மின்சார அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டியவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மின் தடைக்கு பின்னர் அது தொடர்பாக ஆய்வு செய்யவென விசேட குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழுக்களினால் ஆய்வு செய்யப்பட்டு அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அறிக்கை இன்று அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதன்போது அமைச்சரினால் எதீர்காலத்தில் இது  போன்ற சம்பவங்கள் இடம்பெறமால் இருப்பது தொடர்பான யோசனைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
R-06