செய்திகள்

மியன்மாரில் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக அரசு அறிவிப்பு

எதிர்வரும் சில வாரங்களுள் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்க உள்ளதாக ஆன் சாங் சூசியின் புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி 500 பேரை விடுதலைசெய்ய மியன்மாரின் புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தண்டனை வழங்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட உள்ளதுடன் விசாரணைகளுக்காக காத்திருக்கும் ஏனையோர் மீது பதிவுசெய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களும் மீளப்பெற்றுக் கொள்ளப்பட உள்ளன.

மியன்மாரில் புதிதாக உருவாக்கப்பட்ட அரச ஆலோசகர் என்ற பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னர் ஆங் சான் சூசி வழங்கிய முதல் உரையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தமது நிர்வாகத்தின் முன்னுரிமைகளில் ஒன்று என்று குறிப்பிட்டார்.

முன்னர் மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் அரசியல் காரணங்களுக்காக பலரை கைதுசெய்து தடுத்து வைத்துள்ளனர்.

 

n10