செய்திகள்

மியான்மாரில் கடும் நிலநடுக்கம்

மியான்மாரின்(பர்மா) வடமேற்கு பகுதியில் 6.9 அளவுள்ள கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலப்பரப்புக்கு கீழே 122 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரம் இரவு 8.30 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தொடர்பான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

எனினும் ஆரம்பகட்ட தகவல்களின்படி சேதங்கள் மற்றும் காயங்கள் ஏற்பட்டதாக செய்திகள் இல்லை.

இந்தியாவின் கிழக்கு மாநிலங்களிலும், வங்கதேசத் தலைநகர் டாக்காவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

நலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து கொல்கத்தா நகரில் மக்கள் கட்டடங்களை விட்டுவெளியேறினர்.

n10