செய்திகள்

மீண்டும் அணுவாயுத போட்டியில் அமெரிக்காவும், ரஷ்சியாவும்?

அமெரிக்காவும்,ரஷ்யாவும் மீண்டும் அணுவாயுத மோதல் காலத்திற்கு திரும்பும் அபாயம் நிலவுகின்றது.
அமெரிக்காவிற்கும் ரஷ்சியாவிற்கும் இடையில் குறூஸ் ஏவுகணைகள் தொடர்பாக அதிகரித்தும் வரும் முறுகல்நிலையும், ரஷ்சியா தனது அணுவாயுத நீர்மூழ்கிகளை பயன்படுத்துவதும் ஆயுத கட்டுப்பாட்டு யுகத்தை முடிவிற்கு கொண்டுவரக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அபாயகரமான அணுவாயுதங்களை கொண்டுள்ள இரு நாடுகள் மத்தியில் ஆபத்தான போட்டியொன்று நிலவக்கூடிய சூழலும் உருவாகியுள்ளது.
ரஷ்யா புதிய குறூஸ் ஏவுகணைகளை நிலைகொள்ளச்செய்துள்ளமைக்கு பதில்நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளதை தொடர்ந்தே இந்த பதட்;டகரமான நிலைஉருவாகியுள்ளது.
இதன் மூலமாக பனிப்போர் காலத்தின் முக்கியமான உடன்படிக்கையொன்றை ரஷ்யா மீறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்கா, 23 வருடங்களுக்கு பி;ன்னர் ஐரோப்பாவில் தானும் குறூஸ் ஏவுகணைகளை நிலைகொள்ளச்செய்யப்போவதாக தெரிவித்துள்ளது.
மேலும் டிசம்பர் 26 ம்திகதி அமெரிக்கா குறூஸ் ஏவுகணைகள் வருவதை இனம் காண்பதற்கு உதவும் அதிநவீன தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்துள்ளது.
ரஷ்யாவின் தாக்குதல் நீர்மூழ்கிகளிலிருந்து ஏவப்படக் கூடிய ஏவுகணைகளை தடுப்பதற்கு இந்த தொழில்நுட்பம் அவசியமானது என அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ரஷ்சியாவின் நீர்மூழ்கிகள் அதிகளவில் அட்லான்டிக் பகுதியில் நடமாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்த நீர்மூழ்கிகள் அணுஏவுகணைகளை எடுத்துச்செல்ல கூடியவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த வருடம் பல ஏவுகணைகளை ரஷ்சியாவும் அமெரிக்காவும் கேந்திர முக்கியத்துவம வாய்ந்த பகுதிகளில் நிறுத்தியுள்ளதாகவும்,தங்களுடைய ஆயுதங்களை நவீனமயப்படுத்துவதற்கு பல மில்லியன் டொலர்களை செலவுசெய்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் யுத்தம் மற்றும்வீழ்ச்சியடைந்து வரும் பொருளதாரத்திற்கு மத்தியில் அணுவாயுதங்கள் ரஷ்சியாவின் பாதுகாப்பையும்,பெருமையையும் உறுதிசெய்பவை என புட்டின் தெரிவித்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.