செய்திகள்

மீண்டும் அதிகாரத்துக்கு வர நான் என்ன பைத்தியக்காரியா ? சந்திரிக்கா

மீண்டும் அதிகாரத்துக்கு வரும் நோக்கம் கிடையாது எனவும் அவ்வாறு அதிகாரத்துக்கு வர விரும்புவோர் மோசடிக்காரர்களே என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று மல்வத்த மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மீண்டும் அதிகாரத்துக்கு வரும் எண்ணம் உங்களுக்கு உண்டா என ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்துள்ள அவர் தெரிவித்துள்ளதாவது.

“எனக்கு என்ன பைத்தியமா? நான் 12 வருடம் அதிகாரத்தில் இருந்து விரும்பியே அதலிருந்து வெளியேறி ஓய்வுபெற்றேன். இனி அப்படிவரவேண்டுமென எனக்கு நோக்கமில்லை. சிலர் அப்படி வர விரும்புகின்றனர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களே அவ்வாறு வர விரும்புகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.