செய்திகள்

மீண்டும் அரசியலுக்குள் நுழையுமுன்னர் முன்னர் இறைஅனுக்கிரகத்தை தேடும் மகிந்த

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு திரும்புவதற்கு முன்னர் இறைஆசீர்வாதத்தை பெறுவதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
திங்கட்கிழமை அவர் கதிர்காமத்திலுள்ள முருகன் ஆலயத்திற்கு சென்றார்.தங்க திரிசூலமொன்றை வழங்கினார்.
முருகன் தமிழர்களின் யுத்தக்கடவுள்.
சிங்கள மன்னன் துட்டகெமுனுவை அவர் பின்பற்றுவதாக தெரிவித்துள்ள ஊடகங்கள் யுத்தங்களில் ஈடுபடுவதற்கு முன்னர் அந்த மன்னனும் குறிப்பிட்ட ஆலயத்திற்கு திரிசூலங்களை வழங்கியதாக தெரிவித்துள்ளன.
தமிழ் மன்னனா எல்லாலனை தோற்கடித்ததற்காக துட்டகெமுனு சிங்களவர்களால் போற்றப்படுகின்றான்.
எனினும் துட்டகெமுனு கதிர்காமத்திற்கு திரிசூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுவது கட்டுக்கதை என்கிறார் வரலாற்று பேராசிரியர் பத்மநாதன்.
அவ்வேளை கதிர்காம ஆலயம் காணப்படவில்லை,துட்டகெமுனு குறித்து அதிகமாக குறிப்பிடும் மஹாவம்சத்தில் கூட கதிர்காமம் குறிப்பிடப்படவில்லை.15 ம் நூற்றாண்டின் பர்மாவின் பாலி ஆவணங்களிலேயே அந்த ஆலயம் குறித்து குறிப்பிடப்படுகின்றது என்கிறார் அவர்.
எனினும் தனது வழிபாட்டிற்கும் அதன் வரலாற்று முக்கியத்துவத்திற்கும் முக்கியத்துவம் கிடைக்கப்பண்ணியுள்ளதன் மூலமாக ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தான் விருப்பம் கொண்டுள்ளதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை கடந்த 18 ம் திகதி ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு திரும்புமாறு வலியுறுத்தி அவரது ஆதரவு அரசியல்வாதிகள் பேரணியொன்றை நடத்தினர். இலங்கையின் பெரும்பான்மை சமூகத்தை தமிழர்கள் மற்றும் மேற்குலகிடமிருந்து காப்பாற்றுவதற்கு ராஜபக்ச மீண்டும் என்பதே அவர்களது முக்கிய கோரிக்iயாக அமைந்திருந்தது.
அந்த பேரணிக்கு அனுப்பிவைத்த செய்தியில் நான் தோற்கடிக்கப்படவில்லை,சதிதிட்டம் மூலம் ஏமாற்றப்பட்டேன் என்றார் அவர்.
ராஜபக்ச தங்காலையில் உள்ள தனது வீட்டில் தனிமையில் தன்னை அடைத்துக்கொண்டாலும் அவரை பார்ப்பதற்கு நாளாந்தம் பேருந்து நிறையபெருமளவு மக்கள் வருகின்றனர்,
அவரை மீண்டும் தலைமையேற்குமாறு கோருகின்றனர். ஆனால் நுகேகொட பேரணியில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது