செய்திகள்

மீண்டும் அரசியலுக்கு வருவேன் என நம்பவில்லை! ஆனால்…? மகிந்த எச்சரிக்கை

“மீண்டும் நான் அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு மீண்டும் அரசியலுக்கு வருவேன் என்ற நம்பிக்கையும் இல்லை. ஆனால், எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டால் அரசியலுக்கு வருவேன். எனது வெற்றிகளிலும் தோல்விகளிலும் துணை நின்ற கட்சிகளை கைவிட்டு விட முடியாது” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருக்கின்றார்.

“அவ்வாறான நிலையில் அடுத்த தேர்தலில் அவர்களின் சார்பாக தாம் மீண்டும் மக்களின் முன் செல்வேன்” என்றும் எச்சரித்துள்ளார் மகிந்த ராஜபக்ஷ.தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் தெரிவித்ததாவது:

“மீண்டும் நான் அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு மீண்டும் அரசியலுக்கு வருவேன் என்ற நம்பிக்கையும் இல்லை. ஆனாலும்,எனது வெற்றிகளிலும் தோல்விகளிலும் துணை நின்ற கட்சிகளை கைவிட்டு விட முடியாது. அவர்களைத் தனிமைப்படுத்துவதை என்னால் அனுமதிக்க முடியாது.

நான் தலையிடாது போனால் அது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். அவர்கள் அநீதியை எதிர்கொள்ள நேரிட்டால், அவர்களின் சார்பாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் முன் செல்வேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.