செய்திகள்

மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என மஹிந்தவை கேட்டுக்கொண்ட எம்.பிக்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே நேற்று மஹிந்தவின் கால்டன் இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவரை மீண்டும் அரசியலுக்குள் கொண்டு வருவது தொடர்பாக கதைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இந்த கலந்துரையாடலின் போது 19வது அரசியலமைப்பு திருத்தம் , தேர்தல் திருத்தம் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது மீண்டும் மஹிந்த அரசியலுக்குள் வர வேண்டுமென எம்.பிக்கள் பலர் அவரை வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும் இது தொடர்பாக அவரால் உறுதியான பதில் எதுவும் கூறப்படவில்லையென தெரிய வருகின்றது.