செய்திகள்

மீண்டும் குடாநாட்டில் பாரிய தேர்தல் பிரச்சாரக் கூட்டம்: அங்கஜனின் ஏற்பாட்டில் நாமல் பங்கேற்பு

எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாளரை இம்முறை தீர்மானிக்கப் போவது சிறுபான்மையினரின் வாக்குகளே ஆகும் என்பதை உணர்ந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, மீண்டும் யாழ் குடாநாட்டில் பாரிய ஒரு பிரச்சாரக் கூட்டங்களை நாளை ஞாயிற்றுக்கிழமை நடாத்தவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளரும் வடமாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்டு, பிரச்சார நடவடிக்கைகளை எதிர்வரும் இரு நாட்களும் வடக்கில் மும்முரமாக ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Angajan_0நாளை யாழ் குடாநாட்டில் வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் இப்பிரச்சாரக் கூட்டம் பாரிய அளவில் இடம்பெறவுள்ளதுடன் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அங்கஜன் தலைமையிலான நீலப் படையணியினர் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருவதைக் காணமுடிகிறது.

இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொள்வாரா என்பது சந்தேகமே. ஏனெனில் அங்கஜனின் நீலப்படையணியினருக்கும் ஈ.பி.டி.பி யினருக்குமிடையில் நேற்று துரையப்பா விளையாட்டரங்கில் ஏற்பட்ட மோதலை அடுத்தே இவர் இதில் கலந்துகொள்ள மாட்டார் என நம்பப்படுகின்றது.