செய்திகள்

மீண்டும் சயீட் அஜ்மல்

உலகின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் சயீட் அஜ்மல் மீண்டும் பாக்கிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.பங்களாதேஸ் அணியுடனான சுற்றுத்தொடரிற்காக அறிவிக்கப்பட்டுள்ள அணியிலேயே அஜ்மல் சேர்க்கப்பட்டுள்ளார்.
பெப்ரவரி மாதம் சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அஜ்மலின் புதிய பந்துவீச்சுமுறைக்கு அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை உலககிண்ண போட்டிகளில் சோபிக்க தவறிய உமர் அக்மல் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.அகமட் செசாட்டிற்கு இருபதிற்கு இருபது அணியிலேயே இடமளிக்கப்பட்டுள்ளது.அதேவேi பவாட் அலாமிற்கு ஒரு நாள்போட்டிகளில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
யூனிஸ்கானிற்கு ஓரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வளித்துள்ள தெரிவுக்குழுவினர்.வேகப்பந்து வீச்சாளர் யுனைட் கானிற்கு இருபதிற்கு இருபது மற்றும் ஓரு நாள் போட்டிகளில் வாய்ப்பளித்துள்ளனர்.
இதேபோன்று முகமட் ஹபீஸ்மற்றும் வஹாப் ரியாஸ் மற்றும் சொகைல் கான் ஆகியோரிற்கு மூன்று விதமான போட்டிகளிலும் இடமளிக்ப்பட்டுள்ளது.
பாக்கிஸ்தான் எப்படி உலககிண்ணத்தில் விளையாடியது, எமது எதிர்கால தந்திரோபாயம் உட்பட பல விடயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளோம் என தெரிவுக்குழுவின் புதிய தலைவர் கரூன் ரசீட் தெரிவித்துள்ளார்.
ஓரு நாள் போட்டிகளில் அணியின் நிலை குறித்தே நாங்கள் அதிகம் கவலைகொண்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
உமர் அக்மல் மற்றும் செசாட் இருவரும் நீக்கப்ட்டமைக்கு அவர்களது ஓழுக்கம் தொடர்பான சில விடயங்களும் காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.அவர்களுடைய மனோபாவம் தொடர்பாக சில பிரச்சினைகள் உள்ளன.முக்கிய அதிகாரிகளும், முன்னாள் வீரர்கள் சிலரும் அவர்களது மனோநிலை கிரிக்கெட்டிற்கு உகந்ததல்ல என அறிக்கை சமர்ப்பித்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இது குறித்து எதனையும் தெரிவிக்காத தெரிவுக்குழு தலைவர் இரு வீரர்களுக்கும் ஓழுக்கநெறி தொடர்பாக கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.