செய்திகள்

மீண்டும் ஜோடிசேரும் ஆர்யா – நயன்தாரா

என்னதான் புத்தம்புது இளம் கதாநாயகிகள் கோடம்பாக்கத்தைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் நயன்தாரா, த்ரிஷா, ஹன்சிகாவை போன்றவர்களுக்கு இருக்கும் மதிப்பு இன்னமும் குறையவில்லை. இன்றும் நயன்தாரா தான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் இயக்குனர்கள் எத்தனையோ பேர். ஹீரோக்களின் விருப்பத் தெரிவும் நயன்தாரா தான்.
தமிழ், தெலுங்கு இரண்டிலும் சொல்லி சொல்லி அடிக்கும் நயன்தாரா ரஜினி, சிரஞ்சீவி என்று மூத்த நடிகர்களோடு ஜோடி சேரும் அதே நேரம் இளம் நடிகர்களோடும் டூயட் பாடி அசத்துகிறார். தற்போது ஆர்யாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துவிட்டாராம் நயன்.
இயக்குநர் விஜய், ஆர்யா கூட்டணியில் உருவான ‘மதராசப்பட்டணம்’ ஏற்கெனவே வெற்றி பெற்றது. இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது. இது ‘மதராசப்பட்டணம்’ இரண்டாம் பாகமா என்பதை இன்னும் விஜய் உறுதி செய்யவில்லை. ஆனால் இந்த ஆண்டு இறுதியில் இந்தப் படத்தை தொடங்க இருக்கிறாராம் விஜய். இந்தப் படத்தில் ஆர்யாவின் ஜோடியாக நடிக்க நயன்தாராவின் கால்‌ஷீட்டை வாங்கியிருக்கிறார்கள்.
ஆர்யா தற்போது ராஜேஷ் இயக்கத்தில், ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, ‘சைஸ் ஸீரோ’ ஆகிய படங்களில் நடிக்கிறார். இவை முடிந்த பிறகு விஜய், ஆர்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் புதிய படத்துக்காக ஒன்றிணைகிறார்கள்.