செய்திகள்

மீண்டும் திருவாரூர் தொகுதியில் களமிறங்கும் கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதி வேட்பாளராக மீண்டும் போட்டியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்லை முன்னிட்டு, திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் போட்டியிடவுள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அதன்பின்னர், தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வரும் 23ம் தேதி சென்னை சைதாப்பேட்டை, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார்.

● 24ம் தேதி கடலூர் மற்றும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் திமுக தலைவர் கருணாநிதி, சிதம்பரம், சீர்காழி பகுதிகளில் வேனில் அமர்ந்தபடி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

● 25ம் தேதி திருவாரூரில் வேட்புமனுத்தாக்கல் செய்யும் அவர், அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

● பின்னர் 26ம் தேதி தஞ்சாவூரிலும், 27ம் தேதி திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று கருணாநிதி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

● 28ம் தேதி விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர், பெரம்பலூர், உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், செங்கல்பட்டு பகுதியில் வேன் மூலம் கருணாநிதி பிரச்சாரம் செய்கிறார்.

● மே 2ம் தேதி திருநெல்வேலி, ராஜபாளையம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் கருணாநிதி, ஆலங்குளம், கடையநல்லூர், சங்கரன்கோவில் பகுதிகளிலும் வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

● மே 3ம் தேதி திருவல்லிப்புத்தூர், விருதுநகர், அருப்புக் கோட்டை காரியாப்பட்டியில் பிரச்சாரம் செய்யும் அவர், மதுரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

● மே 5ம் தேதி சென்னை பொதுக்கூட்டத்திலும், மே 7ம் தேதி காஞ்சிபுரம், வேலூர் பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்று உரையாற்றுகிறார்.

● மே 8ம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் பகுதிகளிலும், மே 9ம் தேதி ஈரோடு, திருப்பூர், கோவை நகரங்களிலும் கருணாநிதி பிரச்சாரத்தில் மேற்கொள்கிறார்.

● மே 12ம் தேதி திருவாரூர் தொகுதியிலும், மே 14ம் தேதி சென்னையிலும் கருணாநிதி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

N5