செய்திகள்

மீண்டும் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க ?

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெறும் என்று கட்சி நிர்வாகிகளிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்று தனது 92 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய தி. மு. க. தலைவர் கருணாநிதிக்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்த நிலையில் அவர் இதனை தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.

தி.மு.க.வில் கருணாநிதியின் போர்வாளாக புகழாரம் சூட்டப்பட்டவர் வை. கோபால்சாமி என்ற வைகோ. ஆனால் 1993ஆம் ஆண்டு தம்மை கொலை செய்ய விடுதலைப் புலிகளுடன் வைகோ சதி செய்தார் என்ற குற்றச்சாட்டை கருணாநிதி முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து தி.மு.க.வில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டார். அவருடன் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் பிரிந்து செல்ல தி.மு.க. பிளவை எதிர்கொண்டது. பின்னர் வைகோ தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது.