செய்திகள்

மீண்டும் பணியில் அர்ஜுன மகேந்திரன்

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சுமார் 5 வருட கால விடுப்புக்குப் பின்னர் மீண்டும் அலுவலகம் சென்று கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் மீது குற்றம் சுமத்தப்பட்டதன் பின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அர்ஜுன மகேந்திரன் விடுப்பில் சென்றிருந்தார்.

விசாரணையில் மத்திய வங்கி ஆளுநர் பிணை முறி மோசடியில் நேரடி தொடர்புபடவில்லை என பிரதமர் நியமித்த விசாரணை குழு அறிவித்தது.

அந்த நிலையில் அர்ஜுன மகேந்திரன் மீண்டும் அலுவலகம் திரும்பியுள்ளார்.