செய்திகள்

மீதிணிசு விழிநிலையும் உயிர் ஒளியின் மொழியும் – கல்லொளி

சி. யமுனாநந்தா

குவாண்டம் (Quantum) பௌதீகத்தில் ஒளியின் இயல்புகளைப் பற்றி கடந்த 100 வருடகால ஆராய்ச்சிகளையும் விட கடந்த 10 வருடகால ஆராய்ச்சிகள் அதிக அறிவைத் தந்துள்ளது. குவாண்டம் பௌதீகத்தை உருஅரு மீதிணிசு இயல் என அழைக்கலாம். உருஅரு மீதிணிசு பௌதீகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது. இவற்றின் நடைமுறைப் பிரயோகம் பல உண்டு. இவற்றில் உயிரியல் ரீதியான ஒளியின் மொழியினை அறிதல் இளம் ஆராய்ச்சியாளர்களை எதிர்காலத்திற்கான காத்திரமான மனித நாகரீகத்திற்கு இட்டுச் செல்லும்.

உயிரியலின் ஒளியின் மொழியினை தாவங்களின் ஒளித்தொகுப்பிலும், மனிதனில் மூளை நரம்புக்கலம் வரை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இவை அண்மைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களாகும்.

உயிரிகளில் ஒளியின் தாக்கம் உயிர் மீதிணிசு (Bio photons) நிலையில் நிகழ்கின்றது. இவை ஐந்து வகைகளாகச் செயற்படுகின்றன. அவையாவன :

(1) இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பௌதீகநிலையில் மீதிணிசு இருத்தல். (Quantum Super position).
(2) இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பௌதீகநிலையில் மீதிணிசு உள்ளபோது அவற்றிற்கு இடையிலான தொடர்பு (Quantum coherence)
(3) இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பௌதீகநிலையில் மீதிணிசுகள் தொடர்பற்ற நிலையில் இருத்தல். (Quantum decoherence)
(4) சக்திமட்டத் தடுப்புடைய இரு பௌதீகநிலைகளுக்கு இடையே பூஜ்ஜியத்துடன் மீதிணிசு இடமாற்றம். (Quantum Tunneling)
(5) இரு பௌதீகநிலை மீதிணிசுகளுக்கு இடையிலான நெருக்கம் (Quantum Entanglement)

உயிர்மீதிணிசு உயிர்களில் காழும் ஒளியினைத் திருமூலர் திருமந்திரத்தில் கல்லொளி எனக் குறிப்பிடுகின்றார். உயிர் ஒளியின் மேற்கூறிய ஐந்நிலைமொழி அட்டமாசித்திகளுக்கு பௌதீக விளக்கத்தை அளிக்கும்.

தாவரங்களில் உயிர்மீதிணிசுத் தாக்கம் ஒளித்தொகுப்பில் செல்வாக்குச் செலுத்துகின்றது. பறவைகளின் பறத்தல் திசையும், உயிர்மீதிணிசுத் தாக்கத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றது. விலங்குகளின் மோப்பப்புலனும் உயிர்மீதிணிசின் தாக்கத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றது.

உடற்கலங்களில் பாரம்பரிய அலகுகளில் இருந்து செய்தி பிரதி எடுத்தல், நொதியத் தாக்கம் என்பவற்றிலும் மீதிணிசு நிலை செல்வாக்குச் செலுத்துகின்றது.

மனித மூளையில் நரம்புக்கலங்களில் ஒளியலைகளின் காழல்கள் அண்மைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. (Quantum Consciousness) நரம்புக்கலங்களில் குழியவுருவில் உள்ள நுண் புன்குழாய்களில் (Microtubules) கணத்தாக்கங்கள் கடத்தப்படுவதில், புரதங்கள் உருவாகுவதில் மீதிணிசு நிலை செல்வாக்குச் செலுத்துகின்றது. இங்கு பூஜ்ஜிய சக்தியுடன் மீதிணிசு இடமாற்றம் (Quantum Tunneling) நிகழ்கின்றது. அவ்வாறே நரம்புக்கலங்களில் இழைமணியினுள் சக்தி உருவாக்கத்திலும் உயிர்திணிசு நிலை (Bio photons) செல்வாக்குச் செலுத்துகின்றது. மேலும் நரம்புக்கல இணைப்புக்களில் கணத்தாக்கம் கடத்தப்படுவதற்கும், மீதிணிசு இடமாற்றம் பூஜ்ஜிய சக்தி உதவியுடன் (Quantum Tunneling) நிகழ்கின்றது. நரம்புக்கல மென்சவ்வுகளுக்கு இடையே சக்தி மாற்றமும் பூட்டுச்சாவி முறையில் மீதிணிசு துரியநிலை மாற்றத்தினால் ஏற்படுகின்றது.

மனிதனில் மயக்கமருந்து கொடுத்து நினைவிளக்கச் செய்யும் மருத்துவத்தில் மீதிணிசு செயல்நிலை செல்வாக்குச் செலுத்துகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஓநழெn வாயுவினை மயக்க மருந்தாகப் பயன்படுத்தியபோது இவை அவதானிக்கப்பட்டுள்ளது.

உடற்றொழிலியல் மாற்றங்களுடன் மீதிணிசுநிலை மாற்றம் தொடர்புபட்டு உள்ளது.இதற்கு அடிப்படையாக மீதிணிசு அதிர்வு நிலைகள் அமைகின்றது. மனிதனின் புத்திக்கூர்மையிலும் உயிர்த்திணிவின் (Biophotons) அதிர்வுகளுக்குத் தொடர்பு உள்ளதாக அறியப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மனச்சோர்வு உட்படப் பல உள நோய்களுக்கு உயிர் ஒளிச் சிகிச்சை (Photo bio modulation)  சாத்தியமாகும்.

சாமானியமக்கள் முகத்தில் ஒளிவட்டம் தெரிகின்றது என்றும் ஆன்மீக வாதிகள் ஞானஒளி வட்டம் என்றும் கூறுவது மூளையைச் சூழவுள்ள ஒளி உணர்வு மீதிணிசு விழிநிலையாகும். இதனைச் சைவசித்தாந்தத்தில் திருமந்திரத்தில் காலொளியாக ஓரொளிச் சக்கரமாகக் காணலாம்.
மருத்துவர்.