செய்திகள்

மீனவர்கள் விவகாரத்தில் இந்திய – இலங்கை அரசுகள் நாடகமாடுகின்றன: வைகோ

மீனவர்கள் விவகாரத்தில் இந்திய – இலங்கை அரசுகள் நாடகமாடுகின்றன என்று மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மலேசியாவில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறியபோது, “மீனவர்கள் விவகாரத்தில் இந்திய – இலங்கை அரசுகள் நாடகமாடுகின்றன. பாஜக அரசு செயல்பாடுகளில் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும், பாஜக கூட்டணியில்தான் மதிமுக உள்ளது. அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுவது தவறா” என்று கேள்வி எழுப்பினார்.