செய்திகள்

மீனவர்கள் விவகாரம் குறித்து இந்திய இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் ஆராயவில்லை

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் படகுப்போக்குவரத்தை ஆரம்பிப்பது குறித்து இந்திய இலங்கை வெளிவிகார அமைச்சர்கள் மத்தியில் கொழும்பில்நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது ஆராயப்பட்டுள்ளது.
எனினும் மங்கள சமரவீர, சுஸ்மா சுவராஜ் மத்தியிலான இந்த பேச்சவார்த்தைகளின் போது மீனவர்கள் குறித்து ஆராயப்படவில்லை.ஓரு வார்த்தை கூட இதுகுறித்து நாங்கள் பேசவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
எனினும் பின்னர் பிரதமர் ரணில்விக்கிரசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது மீனவர்கள் விவகாரம் இடம்பெற்றிருக்கவாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கைச்சாத்திட வேண்டியஉடன்படிக்கைகள் குறித்து ஆராய்ந்துள்ள இரு வெளிவிவகார அமைச்சர்களும், இரு நாடுகளுக்கும் இடையிலான படகுச்சேவையை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து தீவிரமாக ஆராயந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ஏ.எம்.ஜே சாதிக் தெரிவித்துள்ளார்.
2011 வரைகொழும்பு தூத்துக்குடி படகுப்போக்குவரத்து இரு நாடுகளுக்கும் இடையில் காணப்பட்டபோதிலும் பொருளாதரா ரீதியில் நன்மையளிக்காததால் அது இடைநிறுத்தப்பட்டது.இராமேஸ்வரம்- தலைமன்னார் இடையிலான கப்பற்போக்குவரத்து 1980களில் இடைநிறுத்தப்பட்டது.
அரசியல் விவகாரங்கள்
மங்களசமரவீர இலங்கையின் அரசியல் நிலவரங்கள் மற்றும் புதிய அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சரிற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்தும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்து தெரிவித்துள்ள மங்கள சமரவீர புதிய ஜனாதிபதிக்கு குறிப்பிடத்தக்க சிறுபான்மையினத்தவர்கள் வாக்களித்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் புதிய அரசாங்கம் சிறுபான்மையினத்தவர்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.