செய்திகள்

மீனவர் பிரச்சினையை அவதானமாக கையாளும் இந்தியா

இலங்கை இந்தியா மீனவர் பிரச்சினையை இந்தியா மிகவும் அவதானமாக கையாளுவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமான உறவுகளை பாதிக்காத வகையில் இந்த விவகாரத்துக்கு அவதானமாக தீர்வு காணப்படும்.

இருநாட்டு அரசாங்கமும் மீனவர் விடயத்தை அவதானித்துக்கொண்டே இருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.