செய்திகள்

மீனவர் பிரச்சினை ;தமிழக அரசு போதிய முயற்சி எடுக்கவில்லை

தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து தீர்வு ஏற்படுத்த இந்தி மத்திய அரசின் முயற்சியால் மூன்று முறை இலங்கை அரசோடு மீனவர்களை பேச வைத்துள்ளோம். ஆனால் தமிழக அரசு போதிய முயற்சி எடுக்கவில்லை என, இந்திய மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் அவர் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில்,

தமிழகத்தில் 60 சதவீத மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்கள் அதிமுக, திமுக வேண்டாம் என முடிவு செய்து விட்டார்கள்.

சட்டபேரவைத் தேர்தலுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்தில் விதைக்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் இது குறித்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வாக்குக்காக பொதுமக்கள் சல்லிக்காசு கூட வாங்கக் கூடாது. தமிழன் தன்மானத்தை விற்கக் கூடாது. தமிழகம் பல்வேறு துறைகளில் பின்தங்கியதற்கு திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளே காரணம்.

தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து தீர்வு ஏற்படுத்த மத்திய அரசின் முயற்சியால் மூன்று முறை இலங்கை அரசோடு மீனவர்களை பேச வைத்துள்ளோம்.

ஆனால் தமிழக அரசு போதிய முயற்சி எடுக்கவில்லை. தமிழக சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போதுதான் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும்.

தமிழகத்தில் தேர்தலுக்குப் பிறகு ஒருவேளை தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் அதிமுகவை பாஜக ஆதரிக்காது என்றார்.

n10