செய்திகள்

மீன் ஏற்றுமதிக்கான ஐரோப்பா தடை இந்த வருடத்துக்குள் நீக்கப்படும் : பிரதமர்

ஐரோப்பாவிற்கு மீன் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை இந்த வருட இறுதிக்குள் விலக்கி கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை தீர்வையற்ற வரியுடனான மீன் உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கான வாய்பு வெகுவிரைவில் கிடைக்க பெற நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் நேற்று மீனவ சமூகங்களை சந்தித்து உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.