செய்திகள்

மீன் பிடிக்க சென்ற இளைஞர் ஒருவர் நீர்தேக்கத்தில் மூழ்கி காணாமல் போயுள்ளார்

நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட்  காசல்ரீ நீர்தேக்கத்தில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் ஒருவர் நீர்தேக்கத்தில் மூழ்கி காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிப்பதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய சேகர் அமரதேவன் எனும் இளைஞரே நீர்தேக்கத்தில் மூழ்கி காணாமல் போயிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனா்.

சம்பவ தினத்தன்று மாலை தனது நண்பர் ஒருவருடன் இணைந்து நீர்தேக்கத்தில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அங்கு இருவரும் பிரிந்து சென்று மீன் பிடிக்கின்றபோது குறித்த இளைஞன் காணாமல் போயிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன குறித்த இளைஞனை பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து தேடி வருகின்றனா்.

DSC07649

DSC07647

DSC07640_1

DSC07639_1

DSC07638