செய்திகள்

மீரியபெத்த மண் சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒக்டோபருக்குள் வீடு : அரசாங்கம்

கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளை  அமைக்கும் பணிகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் பூர்த்தி செய்வதற்கு  அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த அனர்த்தத்தின் மூலம் அங்கு வாழ்ந்த 57 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 330 பேர் விபத்துக்குள்ளானதுடன் 34 பேர் உயிரிழந்து 05 பேர் காணமடைந்தனர். வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு துரிதமாக வீடுகளை பெற்றுக் கொடுக்கமாறு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 2015 ஒக்டோபர் 15ஆந் திகதிக்கு முன்னர் வீடமைப்பு பணிகள் பூர்த்தி செய்யப்படும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ ஏ.எச்.எம். பௌசி  அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.