செய்திகள்

மீள ஆரம்பிக்க முடியாமல் வடக்கில் பல தொழிற்சாலைகளை உள்ளது

வடமாகாணம் போரினால் பாதிக்கப்பட்டதால் பல தொழிற்சாலைகள் மீளவும் ஆரம்பிக்க முடியாமலுள்ளது. இதனால் வேலைவாய்ப்புப் பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கிராமப்புற பெண்களை நேரில் முனைவோராக மேம்படுத்தும் செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த 30 வருடங்களுக்கு மேலான இடம்பெயர்வுகளால் பலர் தன்னம்பிக்கையை மற்றும் ஆற்றலை இழந்தவர்களாக இருக்கின்றோம். இதுவொரு பாரிய பின்னடைவாகும். போர்காரணமாக முகாம்களுள் அடக்கப்பட்டாலே சிலர் முயற்சியற்றவர்களாக இருந்திருக்கின்றனர்.

குறிப்பாக சில விவசாயிகள் அதிகளவில் நெல்லைத்தான் விரும்புகிறார்கள். ஏனென்றால் சோம்பேறிகளுக்குரிய உற்பத்திதான் தொழிற்பாடுடைய விவசாயிகளுக்கான உற்பத்தி அல்ல. எனவே நம்முடைய முயற்சியால் சிறப்பாக மீண்டெழுந்து தன்னம்பிக்கையுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும்.

அதாவது முல்லைத்தீவில் பார்த்திருக்கிறேன் கணவன்மார் இல்லாத பெண்கள் பலர் முயற்சியாளர்களாக இருக்கிறார்கள். இங்கும் தன்னம்பிக்கையுடனும் முயற்சியுடனும் செயற்பட்டால் வாழ்வில் வெற்றி பெறுவது இலகு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.