செய்திகள்

மீள பதவி வழங்கினால் ஒரு நாள் மட்டுமே சிராணி பதவியில் இருப்பார்

முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை மீளவும் பதவியில் நியமிப்பதற்கு வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் , அவ்வாறு பதவியில் அமர்த்தப்பட்டால் அவர் ஒரேயொரு நாள் மட்டுமே அப் பதவியிலிருக்க இணங்கியிருப்பதாக நம்பகரமாக அறியவருவதாக கொழும்பு ரெலிகிராப் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் எந்தவொரு வழக்கையும் விசாரிக்க விரும்பவில்லையெனவும் அவர் பதவியை இராஜிநாமா செய்வாரெனவும் கௌரவத்துடன் பிரியாவிடை பெறுவதை மட்டுமே அவர் எதிர்பார்ப்பதாகவும் சிரானி பண்டாரநாயக்கவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் ரெலிகிராப்புக்கு தெரிவித்ததாக அந்த இணையத்தளம் எழுதியுள்ளது.