செய்திகள்

முகத்ததை மூடிய தலைக் கவச தடையை ஒத்தி வைக்க திட்டம்?

முகத்தை மூடிய தலைக் கவசத்திற்கு தடை விதிக்கும் திட்;டத்தை ஒத்தி வைப்பது தொடர்பாக பொலிஸாரினால் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

நாளை 2ம் திகதி முதல் முகத்தை மூடிய தலைக்கவசத்துடன் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பதற்கு நாட்டில் தடை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் அந்த தடையை ஒத்தி வைப்பதற்காக பொலிஸார் ஆராய்ந்து வருவதாக தெரிய வருகின்றது.

முகத்தை மூடிய தலைக்கவசத்திற்கு பதிலான தரமான தலைக்கவசங்கள் சந்தையில் இல்லாமையினாலே இது தொடர்பாக ஆராயப்படுகின்றது.

குறித்த தலைக் கவசத்துக்கான தடை திட்டத்துக்கு எதிராக கடந்த வாரம் கொழும்பில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களினால் ஆர்ப்பாட்மொன்று மேற்கொள்ளப்பட்டதுடன் அவர்களால் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.