செய்திகள்

முகத்தை மூடும் தலைக்கவச தடைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு

இன்று முதல் செயற்படுத்தப்பட்ட முகத்தை மறைக்கும் வகையிலான தலைக் கவசத்தை தடை செய்யும் தீர்மானத்தை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் 28ம் திகதி வரை அமுலில் இருக்கும் வகையிலேயே குறித்த தீர்மானத்திற்கான நீதிமன்றத்தின் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1990ம் ஆண்டின் தலைக்கவச சட்டத் திட்டங்களுக்கமைய குறித்த தலைக்கவசத்தினை தடை செய்வதற்கான அதிகாரம் பொலிஸாருக்கு இல்லையெனவும் இதனால் பொலிஸாரின் குறித்த தீர்மானத்திற்கு தடை விதிக்கமாறு கோரி சிவிலியன்கள் இருவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்களை அடிப்படையாக கொண்டே நீதிமன்றம் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.