செய்திகள்

முகம் மூடிய தலைக் கவசத்தை தடை செய்யும் திட்டத்திற்கு எதிராக கண்டியில் பேரணி

முகத்தை மூடும் தலைக் கவசத்துக்கு தடை விதிக்கும் தி;ட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கண்டியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களால் பாரிய ஆரப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது.
பேராதெனிய சந்தியிலிருந்து கண்டி நகர்வரை முகத்தை மூடிய தலைக்கவசத்தை அணிந்தவாறு மோட்டார் சைக்கிள்களில் பயணித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
முக்தை மூடிய தலைக்கவசம் மீதான தடைவிதிக்கும் திட்டத்துக்கு கடந்த காலங்களில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டதையடுத்து அந்த திட்டத்திற்கு நீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்திருந்தது. இருப்பினும் முழுமையாக தி;ட்டம் கைவிடப்படும் வரை போராட்டம் தொடருமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
002