செய்திகள்

முக்கியமான பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை: ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு

மீன்பிடித்துறை தொடர்பான கரிசனைகளில் இலங்கை ஈடுபாடு காட்டிவரினும் பிரதானமான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் கூறியதாக லண்டனிலுள்ள அண்ட கறன்ட நியூஸ் ஏஜென்ஸி கூறியுள்ளது.

மீன்பிடி நிலைமையை முன்னேற்றுவதற்கான அரசியல் நடவடிக்கைகள் இன்னும் அங்கீகரிக்கப்படாதுள்ளது. அத்துடன், படகுகளை கண்காணிக்கும் முறைமையும் கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை, தன் கடப்பாடுகளை நிறைவேற்றவேண்டும். இதன் மூலம் காத்திரமான நல்ல இலக்குகளை அடைய வேண்டும். அதுவரை ஐரோப்பிய ஆணையம் காத்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மீன் ஏற்றுமதி மீதான தடை சில மாதங்களில் முடிவுக்கு வரக்கூடுமென ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார். இலங்கையிலிருந்து மீன் இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம், ஜனவரியில் இருந்து தடை விதித்த பின்னர் மீன் விலைகள் அதிகரித்த போதிலும் அவை இப்போது சமநிலைக்கு வந்துள்ளன என மீன் கம்பனிகள் இரண்டு கூறியுள்ளன.