முக்கிய அரசியல் தலைவர்களுடன் சுஷ்மா சந்திப்பு (படங்கள் இணைப்பு)
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை கௌரவிக்கும் முகமாக விஷேட வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று இந்திய உயர் ஸ்தானிகரால் நேற்றிரவு நடத்தப்பட்டது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் இதில் கலந்துகொண்டிருந்தனர். முக்கிய அரசியல் தலைவர்கள் மட்டுமே இதற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் செய்சங்கரும் இதில் கலந்துகொண்டிருந்தார்.