Search
Thursday 21 September 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை நடத்த குழுவை அமைத்தது அ.தி.மு.க. அம்மா அணி

அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை நடத்த குழுவை அமைத்தது அ.தி.மு.க. அம்மா அணி

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தங்கள் நிபந்தனைகளில் விடாப்பிடியாக உள்ளனர். ஜெயலலிதா மரணம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணை, தினகரன், சசிகலா மற்றும் அவர்களின் குடும்பத்தினர் முழுமையாக நீக்கம் என்ற கோரிக்கையை நிறைவேற்றினால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறுகின்றனர். பிரச்சனையானது ஆரம்பித்த இடத்திலேயே நிற்பதால், பேச்சுவார்த்தை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம் எம்.பி., தலைமை செயலகத்தில் இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அணிகளை இணைப்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வந்தால் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம். நாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. எங்கள் தரப்பில் குழப்பம் இல்லை. பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்துள்ளோம்.
முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார். அம்மாவின் ஆட்சி தொடர வேண்டும், சின்னத்தை பெற வேண்டும், அனைவரும் ஒன்றுபட்டு நல்லாட்சியை கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். அம்மாவின் மரணம் தொடர்பாக விசாரணை வேண்டும் என கேட்கிறார்கள். அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நினைத்திருந்தால், விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கலாம்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஒருவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். அது நிலுவையில் இருக்கிறது. உயர்நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதனை செயல்படுத்த அரசு தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.201704201712511100_kb-palani._L_styvpf


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *