Search
Wednesday 27 May 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்  நாளை அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியுடன் அடுத்த தேர்தலில் கூட்டணி அமைத்துக்கொள்ளுவது குறித்து கலந்துரையாடி வருகின்ற நிலையில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பினை நாளை வெளியிடவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.இது குறித்த அறிவிப்பு அனுராதபுரத்தில் நடைபெறவிருக்கும் ‘சுசந்த அருணா’ நிகழ்ச்சித் திட்டத்தில் வைத்து வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராச்சி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக கோட்டபாய ராஜபக்ஷ ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திர கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகின.அந்தவகையில் அடுத்த தேர்தலில் வேட்பாளர்களை களமிறங்க தயார் என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *