Search
Saturday 24 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கட்சி பேதமின்றி எழுச்சிப் பேரணிக்கு அழைக்கும் தமிழ் மக்கள் பேரவை

கட்சி பேதமின்றி எழுச்சிப் பேரணிக்கு அழைக்கும் தமிழ் மக்கள் பேரவை

பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு தமிழர் தாயகத்திற்குள் ஊடுருவி விட்டது. ஏற்கனவே படைத்தரப்பால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை விடுவிக்க மனமின்றி காலம் கடத்தப்படுகிறது. இந்த வேளையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு பேரணியாக எழுச்சிபெற்று தமிழ் மக்களின் அவலத்தை உலகறியச் செய்வோம்.இது தமிழினம் வாழ்வதற்கான எழுகை. உங்கள் ஒவ்வொருவரின் வரவும் நிச்சயம் சர்வதேச சமூகத்திடம் மிகப்பெரும் கவனயீர்ப்பை ஏற்படுத்தும் என்பதால் செப்டெம்பர் 7 ஆம் திகதி பேரலையாய் எழுந்து பேரணியில் கலந்து கொள்ளுங்கள் என தமிழ் மக்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

செப்டெம்பர் 07 ஆம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் எழுச்சிப் பேரணிக்கு கட்சி பேதங்களை மறந்து அனைவரும் அணிதிரளுங்கள் என்று தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்­கள் பேர­வை­யின் மத்திய குழுக் கூட்­டத்தில் எடுக்­கப்­பட்ட முடி­வு­கள், தமிழ் மக்­கள் பேரவையினால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஊட­கங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது. அந்த அறிக்கையிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கின்ற சிங்கள, முஸ்லிம் முற்போக்கு அமைப்புக்களும் மக்கள் எழுச்சிப் பேரணிக்குத் ஆதரவை வழங்கி குறித்த பேரணியில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *