Search
Tuesday 23 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தனியார் குழந்தைகள் நலக்காப்பகத்தில் இருந்து 37 குழந்தைகள் மீட்பு

தனியார் குழந்தைகள் நலக்காப்பகத்தில் இருந்து 37 குழந்தைகள் மீட்பு

புதுச்சேரி குழந்தைகள் நலக்குழு மேற்கொண்ட அதிரடி ஆய்வில், ஒதியம்பட்டில் உள்ள குழந்தைகள் காப்பகம் மூடப்பட்டு, அங்கிருந்த 37 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

வில்லியனூர் அடுத்த கொம்பாக்கம் பன்சாரா ஜிப்சி ஹோம் என்ற தனியார் காப்பகம் இயங்கி வந்தது. இதில் மொத்தம் 37 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் அங்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் அளித்த தகவலின் பேரில், குழந்தைகள் நலக்குழுத் தலைவர் டாக்டர் வித்யா ராம்குமார் தலைமையில் காப்பகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அங்கிருந்த 37 குழந்தைகள் மற்றும் ஊழியர்களிடம் நலக்குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அக்காப்பகம் உரிய கட்டமைப்பு வசதி இல்லாமல், ஒதுக்குப்புறமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டினரை மகிழ்விக்க அங்கு பெண் குழந்தைகளை நடனமாடும்படி நிர்ப்பந்தம் செய்ததும் விசாரணையில் தெரிந்தது. இதனையடுத்து, காப்பகத்தை மூடி, அக்குழந்தைகளை வேறு இடத்துக்கு மாற்ற குழந்தைகள் நலக்குழு பரிந்துரை செய்தது. அதன்பேரில் சமூகநலத்துறை குழந்தைகளை மீட்டு நல்ல நிலையில் பராமரிக்கப்படும் வேறு காப்பகத்தக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *