Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் நிலையான ஆட்சி ஸ்டாலின் விருப்பம்

தமிழகத்தில் நிலையான ஆட்சி ஸ்டாலின் விருப்பம்

தமிழகத்தில் நிலையான ஆட்சி நடப்பதை பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசை மத்திய அரசு அதிகார மீறல்கள் மூலம் முடக்க நினைக்கிறது. தமிழகத்தில் நிலையான ஆட்சி நடப்பதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும். தமிழக மக்கள் நலன் மற்றும் பிரச்னைகள் பற்றி மத்திய, மாநில அரசுகள் கவலைப்படவில்லை. வருமான வரி துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை, டில்லி போலீஸ் ஆகியவை அரசியலுக்காக பயன்படுத்தப்படுகின்றன. பா.ஜ., அரசு வருமான வரி துறையை முடக்கிவிட்டு தமிழக அரசை நிலைகுலைய வைத்துள்ளது. பா.ஜ.,வை வளர்க்கும் வீண் முயற்சியாக, சித்து விளையாட்டுகளில் ஈடுபடாமல், மேல் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *