Search
Monday 19 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழை தவிர வேறு எந்த மொழிக்கும் இடமில்லை: கருணாநிதி

தமிழை தவிர வேறு எந்த மொழிக்கும் இடமில்லை: கருணாநிதி

சமஸ்கிருத மொழியை திணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தமிழ் மொழியை பாதுகாக்க, தமிழர்கள் அனைவரும் சமஸ்கிருத எதிர்ப்பு போராட்டத்திற்காக சவுக்குடன் புறப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பூங்கோதை ஆலடி அருணாவின் மகள் திருமண விழாவில் பங்கேற்று பேசிய போது கருணாநிதி இவ்வாறு தெரிவித்தார்.

ஹிந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்ற தருணம் வந்த போது அதனை எதிர்த்து தமிழர்கள் போராடியதைப் போல், தமிழ் வேண்டாம், சமஸ்கிருதம்தான் வேண்டும் என்று குரல் கொடுப்பவர்களுக்கு எதிராக தமிழர்கள் ஒவ்வொரு வரும் கையில் சவுக்கை எடுத்துக் கொண்டு விரட்டப் புறப்பட வேண்டும் என கருணாநிதி பேசினார்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *