Search
Saturday 24 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தலைமறைவான மதன் உயிருடன் இருக்கவே வாய்ப்பு அதிகம் –

தலைமறைவான மதன் உயிருடன் இருக்கவே வாய்ப்பு அதிகம் –

100 நாட்களை கடந்தும் தொடர்ந்து தலைமறைவாக உள்ள மதன் உயிருடன் இருக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக மதன் மாயமான வழக்கின் விசாரணை அதிகாரி  தெரிவித்துள்ளார்.

SRM மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி கொடுப்பதாக கூறி 116 பேரிடம், சுமார் 80 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டு விட்டு சினிமா தயாரிப்பாளரும் பச்சமுத்துவின் நெருங்கிய கூட்டாளியுமான மதன், கடந்த மே மாதம் திடீரென தலைமறைவானார்.

மதனின் முக்கிய கூட்டாளிகளான சுதீர், குணா உள்ளிட்ட ஏழுபேரையும் தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் தலைமறைவாக உள்ள மதன் தனியாக இருக்க வாய்ப்பில்லை என்றும், கூட்டாளிகளுடன் ஒரே இடத்தில் இருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசி உள்ளிட்ட இடங்களில் அடையாளம் தெரியாத நபர்களின் சடலங்களை தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் உதவியுடன் விசாரணை அதிகாரிகள் ஆராய்ந்ததாகவும், இதுவரை சந்தேகப்படும்படி எந்த பிரேதமும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், கேரளா, உத்தரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முகாமிட்டுள்ளதாகவும், கொச்சி, வாரணாசி, பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டல்களிலும் மதன் மற்றும் அவரது கூட்டாளிகளை தீவிரமாக தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *