செய்திகள்

திருப்பூரில் பிடிப்பட்ட 570 கோடி குறித்து எங்கள் விசாரணை தேவையில்லை : சி.பி.ஐ

திருப்பூரில் பிடிபட்ட 570 கோடி குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி திமுக தொடர்ந்த வழக்கில், தங்களின் விசாரணை தேவையில்லை என சிபிஐ சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூர் மாவட்டத்தில் 570 கோடி ரூபாய் பணம் மூன்று கண்டெயினர் லாரிகளில் பிடிபட்டன. மிகுந்த சர்ச்சைக்கு பிறகு இது ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான பணம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிடிபட்ட பணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக் கோரி திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவிற்கு, சி.பி.ஐ. சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 570 கோடி ரூபாய் பணம் குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் ஸ்டேட் வங்கிகளிடம் தகவல் பெற முடியும் என்றும், எனவே சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

N5