தலைப்பு செய்திகள்

முதலமைச்சரின் ஆலோசகர் மீதான நிதிமோசடி குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை: கனடிய தமிழர் சமூக அமையம்

முதலமைச்சரின் ஆலோசகர் மீதான நிதிமோசடி குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை: கனடிய தமிழர் சமூக அமையம்

கனடாவுக்கு சில மாதங்களுக்கு முன்னர் வட மாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரன் இரட்டை நகர் உடன்படிக்கையில் கைச்சாத்திட சென்றபோது அவரது உதவியாளர் நிமலன் கார்திகேயனிடம் கனடிய தமிழர் சமூக அமையம் வழங்கிய 50,000 கனடிய டொலர்கள் மோசடி செய்யப்பட்டதாக வெளியிடப்பட்ட செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என்று கனடிய தமிழர் சமூக அமையம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 16ஆம் திகதி ஊடகங்களுக்கு அனுப்பிய கனடாவுக்கான முதலமைச்சர் வருகையின்போது நடாத்தப்பட்ட முதல்வர் உதவித் திட்டத்திற்கான நிதி சேகரிப்பு  கணக்கறிக்கையை மேற்கோள்காட்டி அறிக்கை ஒன்றை நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள கனடிய தமிழர் சமூக அமையம் இன்னமும் சேகரிக்கப்பட்ட பணம் தங்களிடமே இருப்பதாகவும் பணத்தை உரியமுறையில் அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியானதும் அனுப்பிவைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கனடிய தமிழர் சமூக அமையம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் மே மாதம் 16ஆம் திகதி ஊடகங்களுக்கு அனுப்பிய ஊடக அறிக்கை மற்றும் கணக்கு விபரம் ஆகியவை கீழே தரப்படுகின்றன.

அதனுடன் எமது ஊடக அறிக்கையையும் மே மாதம் 16ஆம் திகதி 2017ல் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருந்தோம்

கடந்த சில நாட்களாக ஊடகங்கள், இணையத்தளங்களில் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களது கனடா வருகையின்போது முதல்வர் நிதியத்திற்காகத் திரட்டப்பட்ட நிதி தொடர்பாக உண்மைக்கப் புறம்பான செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சரது கனடா வருகையை பல அமைப்புகளுடனும் சேர்ந்து முன்னெடுத்தவர்கள் என்கின்ற வகையிலும், பிரசுரிக்கப்பட்ட செய்திக் கட்டுரையில் கனடியத் தமிழ்ர் சமூக அமையத்தினுடைய பெயர் குறிப்பிட்டதன் அடிப்படையிலும் இச் செய்தி தொடர்பான உண்மை நிலையை மக்கள் முன்வைக்க வேண்டியது எமது கடமையாகும்.

கனடாவுக்கான முதலமைச்சர் வருகையின்போது நடாத்தப்பட்ட முதல்வர் உதவித் திட்டத்திற்கான நிதி சேர் நிகழ்வின் கணக்கறிக்கையையும் அதனுடன் எமது ஊடக அறிக்கையையும் மே மாதம் 16ஆம் திகதி 2017ல் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருந்தோம். இக் கணக்கறிக்கையில் கையிருப்பலுள்ள பணம் மற்றும் வரவேண்டிய தொகை என்பன தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தப் பணம் இது வரையிலும் யாரிடமும் கையளிக்கபடவில்லை. ஏற்கனவே பேசப்பட்டதன்படி முதல்வரது உதவித்திட்ட அமைப்பில் கனடிய சட்டதிட்டங்களுக்கமையவும் மற்றும் நல்லாட்சிக்கான சில நிர்வாக நடைமுறைகளும் சீரமைக்கவேண்டியமையால் இப் பணத்தினை நாம் இன்னமும் அனுப்பி வைக்கவில்லை. அவ்விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் உடனடியாக இப்பணம் முதல்வரது உதவித் திட்ட அமைப்புக்கு அனுப்பி வைக்கப்படும்.

நாம் முன்னர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த கணக்கறிக்கையையும், எமது ஊடக அறிக்கையையும் மீளவும் இத்துடன் இணைத்துள்ளோம்.

இச் செய்திகள் தொடர்பாக முதலமைச்சர் அலுவலகமும் தமது அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அனைத்து ஊடகங்கள் இணையத்தளங்களிடம் இவ் உண்மையான விபரங்களை மக்களுக்குத் தருமாறு வேண்டிக் கொள்கிறோம்.

GDE Error: Error retrieving file - if necessary turn off error checking (0:)
GDE Error: Error retrieving file - if necessary turn off error checking (0:)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *