Search
Friday 7 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடக்கு கிழக்கில் சுயநிர்ணயஅடிப்படையில் சமஷ்டி அடிப்படையிலானதீர்வுஒன்றைப் பெறுவதேஎமது நோக்கம் – நீதியரசர் விக்னேஸ்வரன்

வடக்கு கிழக்கில் சுயநிர்ணயஅடிப்படையில் சமஷ்டி அடிப்படையிலானதீர்வுஒன்றைப் பெறுவதேஎமது நோக்கம் – நீதியரசர் விக்னேஸ்வரன்

வடக்குகிழக்கில் சுயநிர்ணயஅடிப்படையில் சமஷ்டி அடிப்படையிலானதீர்வுஒன்றைப் பெறுவதேஎமதுநோக்கம். ஆனால்,வரலாற்றுபடிப்பினைகளின் அடிப்படையிலும் சமகாலஉலகநடைமுறைகள்,முரண்பாடுகளுக்கானதீர்வுகோட்பாடுகள்,பூகோளஅரசியல்,சர்வதேசஉறவுகோட்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இறுதித்தீர்வுதொடர்பில் சர்வதேசரீதியானஒருசர்வஜன வாக்கெடுப்பைநாம் கோருகின்றோம். அத்தகையஒருசர்வஜன வாக்கெடுப்புநடைபெறும்வரை இடைக்காலதீர்வுஒன்றுஏற்படுத்தப்படவேண்டும் என்பதுஎமதுகோரிக்கைஆகும். என நீதியரசர் விக்னேஸ்வரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் இம்முறைதேர்தலில் பெரும் போட்டிகளும் பிளவுகளும் தமிழ் தேசியகட்சிகளுக்கு இடையே இருந்தாலும்,தமிழர் அரசியலைசெப்பனிடுவதற்கும் கொள்கைகள் அணுகுமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் எமதுமக்களுக்குபொறுப்பு கூறும் வகையிலுமானஒன்றுபட்டஒருங்கிணைந்தஅரசியல் பரிமாணம் ஒன்றுக்கு இம்முறைதேர்தல் முடிவுகள் வழிவகுக்கும் என்பதுஎனதுஆழமானநம்பிக்கை.

தேர்தலுக்குமுன்னர் ஒத்தகொள்கைஉடையஎல்லோரையும் ஒன்றிணைக்கஎல்லாமுயற்சிகளையும் எடுத்தேன். ஆனால் சிலர் இணைந்துசெயற்படமுன்வரவில்லை. அவர்களுக்குதமிழ் மக்களின் பிரச்சனைகளைவிடகட்சிநலன் முதன்மையாகஇருந்ததுபோல் தெரிந்தது.நான் இன்றும் சொல்கிறேன் இத்தேர்தலின் பின் கூட பலரை இந்தக் கூட்டணியுடன் இணைத்துமுன்னோக்கிச் செல்லவேவிரும்புகின்றேன். அதனால் தான் ஒத்தகொள்கைஉடையவர்களைபலமாகத்தாக்கிஎமக்குள்ளேபிளவுகளைஆழமாக்காமல் பிரச்சாரம் செய்வதைதவிர்த்துவருகின்றேன். ஆனால்,பரந்தஒரு கூட்டணிஅமைப்பதுதொடர்பில் மேற்கொள்ளப்பட்டமுயற்சிகள் தொடர்பில் பொதுமக்களுக்குதவறானகருத்துக்கள் கூறப்பட்டுவருவதைநான் அறிவேன்.

இதேவேளை,தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் ஞாயிறுக்கிழமையுடன் நிறைவடையும் நிலையில் எனக்குஎதிராகசிலஅவதூறுகளைவெளியிடும்வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவுகளைஎடுக்கும் தலைவர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வெளியாகும் சிலபத்திரிகைகளின் அட்டைபக்கங்களைவிலைகொடுத்துவாங்கி இருப்பதாகஅறிகின்றேன். தனதுஅவதூறுகளுக்குநான் பதில் வழங்குவதற்குசந்தர்ப்பம் வழங்காமல் இருக்கும்வகையில் மிகவும் தந்திரமானநகர்வுஎன்றுதான் கருதும் செயல் ஒன்றைஅவர் செய்திருப்பதாகநான் அறிகின்றேன்.

தனதுஅவதூறுகளுக்குநான் பதில் வழங்குவதற்குசந்தர்ப்பம் வழங்காமல் இருக்கும்வகையில் மிகவும் தந்திரமானநகர்வுஎன்றுதான் கருதும் செயல் ஒன்றைஅவர் செய்திருப்பதாகநான் அறிகின்றேன். தான் மட்டும் தான் புத்திசாலிஎன்றுநினைத்துக்கொண்டிருக்கும் இந்தநபர் எமதுமக்கள் எவ்வளவுபுத்திசாலிகள் என்பதையும் தனதுசுத்துமாத்துக்கள் எமதுமக்களிடம் இனியும் பலிக்காதுஎன்பதையும் இன்னமும் உணரவில்லைபோல் தெரிகின்றது. இதேநபர் சிலதினங்களுக்குமுன்னர் என்னைஅரசியலுக்குகொண்டுவந்தசம்பந்தனைநான் நன்றிஉணர்வுஎதுவும் இன்றிஅவருக்குஎதிராகசெயற்படுவதாகவும் விமர்சனம் செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். நான் ஒன்றைஅவருக்கு கூறிவைக்கவிரும்புகிறேன். அதாவது,அரசாங்கத்திடம் பெற்றுக்கொண்டசலுகைகள் பணத்துக்காகஅவர் வேண்டுமானால் சிங்களக்கட்சிகளுக்குநன்றியுணர்வுடன் இருக்கட்டும். ஆனால்,அந்தநன்றிஉணர்வைஎன்னிடம் அவர் எதிர்பார்க்கக் கூடாது.

எனதுமக்களுக்கேநன்றிக்கடன் பட்டுள்ளேன். கர்ணன் வழியில் செஞ்சோற்றுக்கடன் தீர்ப்பதற்காகதமிழ் மக்களுக்குவஞ்சம் செய்யநான் தயார் இல்லைஎன்பதைஅவர் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆகவேஎனதருமைமக்களே,நாம் ஒருபோதும் தமிழ் மக்களின் உரிமைகள்,நல்வாழ்வுபாதுகாப்புஆகியவற்றுக்கானஎமதுபற்றுறுதியில் இருந்துதளரமாட்டோம்.’மீனுக்கு’ புள்ளடி இட்டுநல்லதொருமாற்றத்தைதமிழர் வாழ்வில் ஏற்படுத்தும் ஆயுதங்களாகஉங்கள் வாக்குகள் மாறட்டும்! எமதுதமிழ் மக்களின் அரசியல் சமூக,பொருளாதாரமாற்றுக்கும் கலாசாரஅபிலாஷகளைவென்றெடுப்பதற்கும் வலுவூட்டுவதாகஅவைஅமையட்டும்.

இனப்படுகொலைக்குநீதியைபெற்றுத் தருவதாகஅவைஅமையட்டும்! உங்களைஏமாற்றியவர்களுக்குபாடம் புகட்டுவதாகஅவைஅமையட்டும். நிதிநிறுவனங்களைஉருவாக்கிமக்களின் பணத்தைக்கொள்ளைஅடித்தவர்களைநிராகரிப்பதாகஅமையட்டும்.தமதுபிள்ளைகளின் பிறந்தநாட்களுக்கு ஜனாதிபதி,பிரதமரைஅழைத்துவிருந்துகொடுத்தவர்களைவிரட்டுவதாகஅமையட்டும். அரசாங்கத்துக்குமுண்டுகொடுத்துசலுகைகளைஅனுபவித்தவர்களுக்குதண்டனைவழங்குவதாகஅவைஅமையட்டும்.இதேபோலத்தான் பெரும்பான்மையினக்கட்சிகளில் இருந்து இங்குவந்துபோட்டியிடும் வேட்பாளர்களைவிரட்டிஅடியுங்கள்.

வாக்களிப்புதினத்துக்கு இன்னமும் சிலநாட்களே இருக்கின்றன. கட்சிகளின் தேர்தல் பிரசாரங்கள் மற்றும் விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் எந்தகட்சிக்குவாக்களிப்பதுஎன்பதுதொடர்பில் ஒருதெளிவானமுடிவுக்குநீங்கள் தற்போதுவந்திருப்பீர்கள். தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் கொள்கைகள்,நோக்கங்கள் மற்றும் அந்தநோக்கங்களைஅடைவதற்கானஎமதுஅணுகுமுறைகள் மற்றும் உபாயங்கள் தொடர்பில் தெளிவானஒருதேர்தல் விஞ்ஞாபனத்தைநாம் உங்கள் முன்வைத்திருக்கிறோம். இதுவரைஅதனைநீங்கள் படித்துபார்க்கவில்லையானால் தயவுசெய்துவாக்களிக்கசெல்வதற்குமுன்னர் அதனைப்படித்துப்பாருங்கள்.

எமதுபூர்வீகப்பகுதிகளான இணைந்தவடக்குகிழக்கில் சுயநிர்ணயஅடிப்படையில் சமஷ்டி அடிப்படையிலானதீர்வுஒன்றைப் பெறுவதேஎமதுநோக்கம். ஆனால்,வரலாற்றுபடிப்பினைகளின் அடிப்படையிலும் சமகாலஉலகநடைமுறைகள்,முரண்பாடுகளுக்கானதீர்வுகோட்பாடுகள்,பூகோளஅரசியல்,சர்வதேசஉறவுகோட்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இறுதித்தீர்வுதொடர்பில் சர்வதேசரீதியானஒருசர்வஜன வாக்கெடுப்பைநாம் கோருகின்றோம். அத்தகையஒருசர்வஜன வாக்கெடுப்புநடைபெறும்வரை இடைக்காலதீர்வுஒன்றுஏற்படுத்தப்படவேண்டும் என்பதுஎமதுகோரிக்கைஆகும்.
இதனைசாத்தியம் ஆக்குவதற்கும் எமதுசமூக,பொருளாதார,கலாசாரமேம்பாட்டைஅடைவதற்கும் நிலத்திலும் புலத்திலும் உள்ளபுத்திஜீவிகளைஉள்வாங்கிநிறுவனரீதியானகட்டமைப்புக்களைஉருவாக்கிசெயற்படும் ஒருஅணுகுமுறையைமுன்மொழிந்திருக்கின்றோம்.

இங்குநாம் முதலீடுசெய்யவிருப்பதுஎமதுஅறிவையே. ஆயுதங்கள்தான் இன்றுதமிழ் மக்களிடையேமௌனிக்கப்பட்டிருக்கிறதேஅன்றிஅதுஎமதுஅறிவாற்றல் அல்ல. முன்னரைவிடபன்மடங்குபெருகிஉலகம் பூராவும் இன்றுஅதுசுடர்விட்டுப்பிரகாசிக்கின்றது. இதனைகடந்த 10 வருடங்களாகதமிழ் தேசிய கூட்டமைப்புசரியாக இனங்கண்டுபயன்படுத்தத்தவறியதுடன் ஒருசிலரின் தனிப்பட்டவிருப்புவெறுப்புக்களுக்குஏற்பசெயற்பட்டமையேஎமதுஎல்லாபின்னடைவுகளுக்கும் காரணம் ஆகும். இந்தஅறிவைநாம் எமதுநிறுவனமயப்படுத்தப்பட்டசெயற்பாடுகளில் சரியாகப்பயன்படுத்துவோமானால் வெற்றிகள் எம்மைநிச்சயம் தேடிவரும்.

இதற்குதமிழ் அரசியல் கட்சிகளிடையேமட்டுமன்றிபுலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மத்தியிலும் ஒருங்கிணைந்தசெயற்பாடுஅவசியமாகும். நான் எவ்வளவுகாலம் இருப்பேன் என்பதுதெரியாது. ஆனால்,எனக்குப் பின்னர் முகவர்கள் நுழைந்துதமிழ் தேசியத்தின் பாதைதடம்புரளாமல் இருக்கவேண்டுமானால் வலுவானநிறுவனமயப்படுத்தப்பட்டசெயற்பாடுகள் அவசியம். ஆகவே,புத்திஜீவிகளே,செயற்பாட்டாளர்களே!எம்முடன் ஒன்றிணையுங்கள் என்று இந்தசந்தர்ப்பத்தில்வேண்டிக்கொள்கின்றேன்.ஆகவே,மக்களேவீட்டைவிட்டுவெளியேவாருங்கள்!மீனுக்குவாக்களியுங்கள் என இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *