செய்திகள்

முக்கிய போட்டிகளில் இருவேறு விதமான வரலாற்றை கொண்ட அணிகளின் கதை

srilanka-getty1503-630

மஹேல ஜெயவர்த்தனவின் 2007 அரையிறுதியின் இனிங்ஸ்,2011இறுதியாட்டத்தின் சதம்,இருபதிற்கு இருபது உலககிண்ண இறுதியாட்டத்தின் சங்காவின் சதம்,மலிங்க மற்றும் குலசேகரவின் பந்துவீச்சுக்கள்,என முக்கிய போட்டிகளில் இலங்கை அணி வீரர்கள் பிரகாசித்த பல வரலாறு உள்ளது.
மத்யுஸ், ஹேரத், தில்சான், திசார , திரிமன்ன என அனைவரும் அணிக்காக முக்கிய போட்டிகளில் பிரகாசித்தவர்கள்முக்கிய போட்டிகளில் இலங்கை வெற்றிபெற்ற தருணங்களை நினைகூறும் மஹேல அந்த தருணங்கள் எங்களுக்கு நம்பிக்கையூட்டுகின்றன, ஏற்கனவே நாங்கள் இவ்வாறான சூழ்நிலைகளில் பிரகாசித்துள்ளோம்,என்பது எங்களுக்கு பலமளிக்கின்றது என்கிறார்.கடந்த உலக கோப்பைகளில் காலிறுதி,மற்றும் அரையிறுதியாட்டங்களிலேயே இலங்கை தீடீர் என பலம் பெறத்தொடங்கியது.ஆபத்தானதாக மாறத்தொடங்கியது.மேலும் அவர்கள் இரு இருபதிற்கு இருபதுஉலக கிண்ண இறுதியாட்டங்களையும் சந்தித்துள்ளனர். இதனால்அணி சிறந்த நம்பிக்கையுடன் காணப்படுகின்றது.

இந்த உலக கோப்பையில் ஆரம்பத்திலிருந்து ஆக்கிரமிப்பதை நோக்கமாக கொண்டு இலங்கை செயற்படவில்லை மாறாக சரியான தருணத்தில் உச்சத்திற்கு செல்வதையே அவர்கள் நோக்கமாக கொண்டிருந்தனர்.
தற்போது கடந்த காலத்தில்உலககிண்ணபோட்டிகளில் அவர்கள் கூட்டாக வெற்றிபெற்ற அந்த தருணத்தில் அவர்கள் உள்ளனர்.
2007 இல் யாரும் எதிர்பாரா விதமாக அவர்கள் அரையிறுதிக்குள் நுழைந்தனர்.பின்னர் நியுசிலாந்தை வீழ்த்தி விட்டு இறுதியாட்டத்திற்கு சென்றனர். இறுதியாட்டத்தில் அவர்களை தோற்கடிக்க அவுஸ்திரேலியாவிற்கு கில்கிறிஸ்டின் விசேட இனிங்ஸ் அவசியமாகவிருந்தது.
2011 உலககிண்ணப்போட்டிகளிலும் அவர்கள் அவ்வாறே விளையாடினர்.
புதன்கிழை காலிறுதி போட்டியில் அவர்கள் சந்திக்கவுள்ள தென்னாபிரிக்க அணியின் வரலாறு இதற்கு எதிர்மாறானது.அவர்கள் முக்கிய போட்டிகள் வரை சிறப்பாக விளையாடுவார்கள் பின்னர் பதட்டத்திற்கு இரையாவார்கள். முக்கிய போட்டிகளில் விளையாடும் போது அழுத்தங்கள் காரணமாக அவர்களது மனோநிலை குழம்பிவிடும் என சொல்லப்படுவதுண்டு.இதன் காரணமாக முக்கிய போட்டிகளில் தொடைநடுங்கிகள் என்ற பட்டத்தை அவர்கள் எதிர்கொள்ளநேரிட்டுள்ளது.
இலங்கை அணி தனக்கு முதல் சுற்றில் கிடைத்த இரு தோல்விகள் குறித்து அதிகம் கவலைப்படவி;ல்லை –காலிறுதிக்கு செல்வதே அவர்களது நோக்கமாக காணப்பட்டது.
மாறாக தென்னாபிரிக்காவை அவர்கள் சந்தித்த இரு தோல்விகள் காயப்படுத்தியுள்ளன.
இந்தியாவிற்கு எதிரான போட்டியின் பின்னர் –நான் தோல்வியடைந்த பின்னர் உள்ளேயிருந்து கவலைப்பட்டுக்கொண்டிருப்பதற்கு விரும்பவில்லை என அணித்தலைவர் டி வில்லியர்ஸ் தெரிவித்தார்.பாக்கிஸ்தானிற்கு எதிரான போட்டியில் தோற்ற பின்னர் நாங்கள் நினைப்பது போல நாங்கள் சிறந்த அணியில்லை என்றார்,அதற்கு சில நாட்களுக்கு பின்னர் இந்த உலககிண்ணத்தில் நாங்களே சிறந்த அணி என்றார்.

208805
அவர்கள் இலங்கை அணியை விட சிறந்த அணி என்பதே பரவலான கணிப்பு.இறுதியாக இரு அணிகளுக்கும் இடையில் கொழும்பில் இடம்பெற்ற ஒரு நாள் தொடரில்தென்னாபிரிக்காவே வெற்றிபெற்றது.அம்லா அந்த தொடரில்இரு சதங்களை பெற்றார்.எதிரணியின் துடுப்பாட்ட வீரர்களை தடுமாற வைக்க கூடிய வேகப்பந்துவீச்சு அவர்களிடமுள்ளது. சுழற்பந்துவீச்சாளர் தாகிர் கூட இம்முறை சிறப்பாகவே விiளாடியுள்ளார்.இலங்கை அணியின் ரங்கனஹேரத் விளையாடுவாரா என்பது சந்தேகமாகவுள்ளது.
இவற்றின் காரணமாக அவர்களே அரையிறுதிக்கு செல்வார்கள் என்ற நம்பிக்கை காரணமாகவுள்ளது.ஆனால் அவர்கள் சிறப்பாக விளையாடுவதற்கு எந்த காரணமும் இல்லாத அணியை சந்திக்கின்றனர்.இலங்கை அணி தீடீரென புத்துயுர்பெற்று ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறன்கொண்டது.