செய்திகள்

முச்சக்கரவண்டி – வான் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

நேற்று மாலை மன்னார் – இலுப்பைக்கடவை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் மரணமடைந்துள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேரும் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், குழந்தையொன்று மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகள் மற்றும் மகளின் பிள்ளை ஆகியோர் மடுத் திருத்தலத்திற்கு வந்துவிட்டு, யாழ்ப்பாணம் நோக்கி முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்தனர். இவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியும் மன்னார் நோக்கி பயணித்த வானும் மோதியதாக தெரியவருகிறது.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.