முச்சக்கரவண்டி விபத்து! யாழில் மூவர் படுகாயம்
குடித்துவிட்டு மதுபோதையில் முச்சக்கர வண்டி செலுத்திய போது யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்துக்கு அண்மையில் நேற்றுப் புதன்கிழமை (15.04.2015) வேகக் கட்டுப்பாட்டையிழந்து மதிலுடன் மோதியதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியில் பயணித்த முச்சக்கர வண்டிச் செலுத்துனர் உட்பட மூவரும் மது போதையிலிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளைத் தெல்லிப்பழைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்.நகர் நிருபர்-