செய்திகள்

முச்சக்கரவண்டி விபத்து – மூவர் படுங்காயம்

அக்கரபத்தனை பொலிஸ் பகுதியில் பசுமலை நகரத்திலிருந்து அக்கரபத்தனை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று உருலேக்கர் தோட்டப்பகுதியில் சுமார் 30  அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.

முச்சக்கவண்டியில் பயணித்த மூவர் காயங்களுடன் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இச்சம்பவம்நேற்று  மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கரவண்டியில் சென்ற 2 வயது குழந்தை தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தின் காரணமாக அக்கரபத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள தெரிவிக்கின்றன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை அக்கரபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

n10

20160317_151326