செய்திகள்

முச்சக்கரவண்டி விபத்து – சாரதி காயம்

ஹற்றனில் இருந்து நாவலப்பிட்டியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று ஹற்றன் நாவலப்பிட்டி பிரதான வீதியில் தலைகிழாகப் புரண்டு விபத்துக்குள்ளானது.

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை பகதுலூவ பகுதியில் பிரதான வீதியில் தலைகீழாக புரண்டு நாவலப்பிட்டியிலிருந்து ஹற்றன் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்துக்கு சபைக்கு சொந்தமான பஸ்ஸில் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி சிறு காயங்குள்ளாகியிருப்பதாக, விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவிக்கின்றனா்.

இவ்விபத்து இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனா்.

குறித்த முச்சக்கரவண்டியில் 3பேர் பயணித்ததாகவும் அவா்களுக்கு எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லையெனவும் முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து நோ்ந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவிக்கின்றனா்.

2015-03-18 14.21.42