செய்திகள்

முச்சக்கர வண்டி பஸ் விபத்து: ஐவர் பலி

இன்று மாலை பஸ் வண்டி ஒன்றுடன் முச்சக்கரவண்டி வண்டி ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஐவர் பலியாகியுள்ளனர்.

மாத்தறையில்ருந்து கதிர்காமம் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ்சுடன் ஹம்பாந்தோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹம்பாந்தோட்டை பல்லேகம பிரதேசத்தில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஹம்பாந்தோட்டை பொலிசார் தெரிவித்துள்ளனர்.