செய்திகள்

முடக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் தாவடிக் கிராமம் இன்று காலை விடுவிக்கப்பட்டது

யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளியாக இனங்காணப்பட்டவர் வசிக்கும் தாவடி கிராமம், நோய் பரவலைத் தடுக்கும் வகையில் முடக்கப்பட்டு இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.குறித்த கிராமத்தில் இருந்து வெளியேறவும் மற்றும் உள்நுழையவும் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை காலை இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது.இந்நிலையில் அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினரும் வெளியிறியுள்ளனர்.அத்துடன் தாவடி பகுதி கொரோனா தொற்று அற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டு மக்கள் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.(15)