செய்திகள்

முடிந்தால் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்திக்காட்டுங்கள் : ஐ.தே.கவுக்கு டிலான் சவால்

தேர்தலுக்கு அஞ்சவில்லை என்றால் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்திக்காட்டுமாறு ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஊடக பேச்சாளரும் அமைச்சருமான  டிலான் பெரேரா ஐக்கிய தேசிய கட்சிக்கு சவால் விடுத்துள்ளார்.
இன்று பதுளையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இந்த சவாலை விடுத்துள்ளார்.
தேர்தலுக்கு பயமில்லையென்றால்  ஆயுட்காலம் முடிவடைந்துள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்திக்காட்டுங்கள் என  நாம் ஐக்கிய தேசிய கட்சியினருக்கு பகிரங்கமாக சவால் விடுக்கின்றோம். அப்படி தேர்தல் நடந்தால் நிச்சயமாக நாமே வெற்றிப்பெறுவோம். இவேளை உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடமும் கேட்டுக்கொள்கின்றோம். என அவர் தெரிவித்துள்ளார்.